பெண்களே உஷார்! இந்த வகை குணநலன்கள் கொண்ட கணவனை அடையாளம் காணுங்கள்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் எனும் வழக்கமான வசனத்திற்க்கு பின் உள்ள நிதர்சனம் வேறு. பெரும்பாலான திருமண பந்தம் நீடிப்பதற்கு காரணம் மனைவியின் சகிப்புத்தன்மை மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் தான்.

குழந்தையின் அழுகுரலே பல தற்கொலைகளை தடுக்கிறது. எத்தனை படித்து, கை நிறைய சம்பாதித்தாலும் பெண்களின் கண்ணீர் வெளியே தெரிவதில்லை, தெரியும் படி அவளது நடவடிக்கைகளும் இல்லை.

அடுப்பூதும் பெண்ணிற்க்கு படிப்பெதற்கு என்ற காலத்தில் இருந்து தன்னை புதுப்பித்துக்கொண்ட பெண், இன்று எல்லா துறைகளிலும் ஆணுக்கு நிகராக வந்து விட்டாள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆணின் மனதில் இன்னும் தனக்கான அடிமை பெண் என்ற எண்ணம் தான் மாறவில்லை. விதிவிலக்காக பெண்களை கொண்டாடும் ஆண்களும், ஆண்களை திண்டாட வைக்கும் பெண்களும் உள்ளனர் என்பது மறுக்கவியலாத உண்மை. மோசமான ஆணிடம் மாட்டிக் கொண்டு தனக்கு என்ன அநீதி நடக்கிறது என்பதை உணராத பெண்களை தட்டி எழுப்புவோம்.

திருமணம் என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தில், ஒரு ஆண் தன் மனைவியின் சுக, துக்கங்களுக்கு பொறுப்பேற்கிறான் ஆனால் அவளது அடிப்படைத் தேவைகளுக்கு கூட கணவனிடம் மன்றாட வைக்கும் கணவன்களே அதிகம்.

குற்றஞ்சாட்டுதல்

எதற்கெடுத்தாலும் மனைவியை குற்றஞ்சாட்டுதல், அதாவது தன் தவறை மறைக்க மனைவியை குற்றம், குறை கூறி எதிர்ப்பு தெரிவிக்க விடாமல் அடக்குதல். குழந்தையின் குறும்பிலிருந்து, டூ வீலரில் பெட்ரோல் தீர்ந்ததற்க்கு திட்டும் ஆண்கள் உண்டு.

சுய வரவு -செலவுகளை மறைத்தல்

வீட்டின் பொருளாதாரம் என்பது கணவன் மனைவி இருவரும் அறிந்த வரவு செலவு கொண்டிருத்தலே நல்ல குடும்பத்திற்கு அழகு. சம்பாதிக்காத மனைவியாக இருந்தாலும், ஏதேனும் அசம்பாவிதம் கணவருக்கு நேர்ந்தால் கடன்காரர்கள் மனைவியிடம் தான் கடனை திருப்பி தரச் சொல்லி கேட்பார்கள். ஆதலால் வாங்கிய – கொடுத்த கடன்களின் விபரம் மறைப்பதே கணவரின் நேர்மையை சந்தேகிக்க கூடும்.

வீட்டு வேலைகளை பகிர்தல்

சோம்பலும், இளக்காரமும், ஆணவமும், ஆதிக்க உணர்வுள்ள ஆணால் தான் தன் மனைவி கஷ்டமான வேலைகளை செய்யும் போது, பொழுதுபோக்குகளில் மூழ்கமுடியும். நம் வீட்டை நாம் இருவரும் அழகுற செம்மைப்படுத்துவோம் என்ற எண்ணம் இல்லாதவர்களை எந்த லிஸ்டில் வைப்பது?

விவாதங்களை தவிர்த்தல்

மனைவியின் நியாயமான கோரிக்கைகளை, எதிர்ப்புகளை செவிசாய்க்காமல் வெளியேறுவது என்பது கணவரது குற்றங்களை மனைவி எடுத்துக் கூறும் போது அதை எதிர்க்கொள்ள திராணியற்ற ஆண் தான், மனைவியின் மீது பழி சுமத்தி, விவாதங்களை தவிர்த்து வெளியேறுவான்.

ஒவ்வொரு செயலிலும் நீ எனக்கு முக்கியம் இல்லாதவள் என்பதை கணவன் உணர்த்துவதை மனைவி உணராமல் இல்லை. தன்னை நம்பி வந்த சக மனுஷிக்கு எந்த விதமான கடமைகளையும் சரிவர செய்யாத கணவனிடம் அடிப்படை நேர்மையும் இருப்பதில்லை. இதில் மது, மாது, சூது அடிமைகளாக இருந்தால் அந்த பெண்ணின் நிலைமை அந்தோ! பரிதாபம் தான்.


“விழிகள்
நட்சத்திரங்களை
வருடினாலும்,
விரல்கள்
என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்..!

– மு.மேத்தாவின் வரிகளைத் தான் பிரதிபலிக்கிறது பெரும்பாலான இந்திய பெண்களின் திருமணவாழ்க்கை. ஆயிரம் ஆசைகளோடு திருமண வாழ்க்கையை தொடங்கிய பெண்ணிற்க்கு அவளது கனவுகள் பொசுங்கினாலும், அவளுக்கான வாழும் உரிமை மற்றும் அவர்களது குழந்தைகளின் மனநலத்திற்க்காகவாது கொடும் குண ஆண்கள் திருந்த வேண்டும்.


Be sure about certain characters about your husband to make your married life smooth. A good husband has to avoid certain factors such as arguments for silly things, accusing each other, hiding personal expenditures, sharing household chores, arguments on certain topics etc. Ladies have to be alert while choosing your husband.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.