திருமண முறிவு தரும் சிக்கல்கள்!!!

ஜாதகம் பார்த்து, நல்ல நேரம் குறித்து, பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் என நலம் விரும்பிகள் சூழ்ந்து வாழ்த்திய திருமண பந்தம் முடிவுக்கு வரும் போது அந்த தம்பதியர்களுக்கு மட்டும் அல்ல அவர்களது பெற்றோர்க்கு தாங்கவியலா துயரம்.

அந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கூட லேசாக வருத்தம் ஏற்படுவது உறுதி. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த நாலுபேர் அதாவது, சோ கால்டு சமூகத்தின் குத்தல், நக்கல் பேச்சுகளை பொருட்படுத்தாமல் போனால் கூட ஊர்வாயை உலை மூடி கொண்டு மூடமுடியமா?

திருமண முறிவு என்ற அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல முடிவெடுக்கும் முன் பெண்கள் ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும். ஏனெனில், இது ஆணாதிக்க சமூகம். ஆணுக்கான நியாயங்கள் வேறு, பெண்ணுக்கான நியாயங்கள் வேறு என்று இரட்டை நாக்கு கொண்டவர்களின் தடித்த வார்த்தைகள் சூழ்ந்த உலகம்.

குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் ஆற அமர யோசித்து முடிவு செய்யவேண்டும். இரண்டு மாடுகள் சேர்ந்து பாரத்தை இழுக்கும் போது இலகுவாகவும், இலக்கை நோக்கி எளிதாக, விரைவில் செல்லும். இதே அடிப்படை தான் திருமணவாழ்க்கைக்கும்.

எந்த குழந்தைகளின் நலனுக்காக வேண்டாம் என்று தூக்கி வீசும் உறவைத்தான் குழந்தைகள் தேடிச் செல்லும், தன் ரத்தத்தை வியர்வையாக மாற்றி உழைத்து தன் குழந்தைகளை முன்னேற்றிய தாயை உதறி தள்ளி, தகப்பன் பின் செல்லும் அநேக குழந்தைகள் உண்டு.

தனித்து வாழும் தாயின் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகளும், கண்டிப்புகளும் மிதமிஞ்சி இருக்கும். இந்த சூழலை தன்மீதான இரக்கத்தை சம்பாதிக்க அந்த வில்லன் முன்னாள் கணவன் பயன்படுத்தி கொள்கிறான்.

கள்ளங்கபடமில்லாத குழந்தைகளும் தந்தை சொல்லே வேதவாக்காக எடுத்துக் கொண்டு நாளடைவில் வளர்த்த கடாவை மார்பில் குத்த தகப்பன் முயற்சியும் செய்து வெற்றியும் பெறுகின்றான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் அந்த பெண் விவாகரத்துக்கு பின்னர் படும் பாட்டை சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் கிடையாது.

வேலைப்பார்க்கும் இடத்தில் ஆரம்பிக்கும் பிரத்யேக கவனிப்பு மற்றும் அதன் பின்னர் உள்ள நன்றிகடனும் பெண்களுக்கு தீராத பிரச்சினை.

உறவுகள் கூட்டம் நிரம்பி வழியும் குடும்ப நிகழ்வுகள் அடுத்த தலைவலி தான். தொலைந்து போன சாவிக்கு பதிலாக காவல் காத்த பூட்டிற்க்குத்தான் தண்டனை. பூட்டை உடைத்து தானே கதவை திறக்கிறோம்.

ஒட்டுமொத்த தவறுகளையும் தன்னகத்தே கொண்டு, அதனால் விவாகரத்து செய்த ஆணுக்கு இந்த சமூகம் எந்தவித கட்டுபாடுகளையும் விதிப்பதில்லை. பெண்ணே பலிகடா!

விவாகரத்து கூடாது என்று பழமைவாதத்தை ஆதரித்து எழுதவில்லை. அனுசரணையில்லாத புருஷனையே தெய்வமாக நினைக்கும் அளவிற்கு புதிது புதிதாக பிரச்சினைகள் வரும்.

திருமண முறிவு என்ற முடிவுக்கு வரும்முன், இந்த திருமணமுறிவு எனக்கு என்னவித நன்மைகள் தரும் என்பதையும் விவாகரத்து தனக்கு தரும் நல்லது கெட்டதுகளை கணக்கில் கொண்டு முக்கிய முடிவு எடுங்கள் பெண்களே!

தெரியாத பேயைவிட தெரிந்த பிசாசு மேல் என்பதே பலப்பெண்களின் கருத்து. அதனால் தான் இன்று வரை இந்திய குடும்பங்கள் சிதறாமல் இருக்கிறது. திருமண முறிவு என்ற முடிவு என்பது முழுக்க முழுக்க அந்த பெண்ணின் சூழல் மற்றும் மனம் தான் முடிவு செய்ய வேண்டும். பிறகாரணிகள் இரண்டாம் பட்சம் தான்.

உடலும், மனமும் துவண்ட பொழுதுகளில் தோள் சாயத்தான் இந்த கணவன் மனைவி உறவு நீடிக்கணும் என்பதே மூத்தோர்களின் அறிவுரை. ஆயிரம் காலத்து பயிர் கருகுவதை யார் தான் விரும்புவர்?


Getting divorce from a married relationship might be easier than the consequences that comes after. It’s always women who is left to face all the aftermath from a divorce. Kids live with you would have limited freedom or will have to brought up with restrictions which will give a space later to your ex to step-in again in relationship. You may have people surrounded you in family and in workplace to know the sufferings that you undergo. Thinking many time before taking a divorce is good at times.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.