பிரியத்தோடு பிரிவோம்! (Love Failure or Failed Relationshp?)

உறவுகள் அமைவது இறைவனின் சித்தம், நமக்கு பிடித்த எல்லா குணங்களோடு அப்பாவும், அம்மாவும் வாய்ப்பே இல்லை. அப்புறம் எங்கே மற்ற உறவுகள்? பெற்றோர்கள் நம்மை செதுக்கும் சிற்பிகள்.ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நமக்கே நமக்கு என்று ஒரு ஜீவன் துடிப்பது என்பது வரம்.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மனதிற்கு பிடித்த நபர் வயது வித்யாசமின்றி நட்பு, அன்பு, நேசம், உறவு என்ற பெயரில் இருப்பார்கள். எல்லா உறவுகளிலும் நாம் தேடுவது அழகான தோழமையை தான்.

மலரும் நினைவுகள்

பால்ய கால நினைவுகளை அசைப்போட்டால், நம் மனதை முழுவதும் ஆக்ரமித்தது நண்பர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சேர்ந்து ஊர் சுற்றிய, தப்பு செய்து மாட்டிய, விபத்தில் நண்பனை பறிக்கொடுத்த கண்ணீர் கதை, காதல் தூது, காதல் தியாகம் வேறு யாருக்கு நண்பணுக்காக தான். உறவுகளை விட உயிராக நேசித்த நட்புகள் சூழ்ந்திருக்கத்தான் ஆசைப்படுகிறோம்.

நாணயத்திற்க்கு இரு பக்கம் போல மோசமான நண்பனின் துரோகங்கள், பழி வாங்கும் நடவடிக்கை, ஏமாற்றுதல், புறம் பேசுதல், மனம் போகும் படி கேலி பேசுவது ….. இந்த பட்டியலும் நீண்டு கொண்டே போகும். எல்லா அனுபவங்களும் நம்மை பண்படுத்த தான்.

“உளி விழுவது வலி என அழும் கற்கள் சிற்பமாகாது”, அதுபோல மனித உறவுகள் மூலம் வரும் சிக்கல்கள் நம் மனதை திடப்படுத்தி எதையும் தாங்கும் இதயம் ஆகிறது.

சிறு குழந்தை மனிதனாக வளரும் போது ,அவனது அறிவு, ஆளுமை உடன் கெட்ட குணங்களும் சேர்ந்து வளருகிறது, விளைவு ஈகோ உரசல்கள், போட்டி, பொறாமை, ஏளனம் ….நட்பு ஆரம்பித்த போது இருந்த அனுசரணைகள் நாளாக நாளாக குறைகிறது. பழக பழக பாலும் புளித்துப் போகிறது.நட்புக்கு ஒரு முற்றுப்புள்ளி.

இணக்கமான நட்பு

அபூர்வமாக சில நட்புகள் மிக நெருக்கமாக, சொல்லப்போனால் காதல்களை விடவும் மனதிற்கு நெருக்கமாக, ஏன் சில நேரங்களில் உரையாடலில் ஒருவரின் வரியை பல சமயம் இன்னொருத்தர் பிரதிபலிக்கும் வகையில் ஒத்த எண்ண அலைகளுடன் இருப்பர்…. யார் கண் பட்டதோ, சில சமயம் அப்போதுதான் இடி விழும். கால, சூழல் சுற்றியிருக்கும் மனிதர்களால் உருவாக்கப்படுகிற சிக்கல்கள். அப்படிப்பட்டவர்கள்தான் நம்மைச் சூழந்திருக்கிறார்கள்.

சிக்கல்கள் வீரியமாக, பிரிந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உறவுகள் வருவதும் போவதும் சகஜம். பிரிவு என்பது காரசாரமாக தான் இருக்கவேண்டுமா? ஒருவர் பேசாத ஆயிரம் வார்த்தைகள் கண்களில் தெரிய, இன்னொருவர் பேசும் வார்த்தைகள் மனதை தைக்க என்று இருவர் சேர்ந்து கட்டிய நட்பு பாலத்தை ஒருவர் மட்டும் அதன் தூண்களை உடைப்பது நியாயமா?

வெளியேற்றம்

சிகரெட்டிலிருந்து

வெளியே தப்பிச் செல்லும்

புகையைப் போல

என் உடன்பிறப்புகள்.

நான் சிகரெட்டிலேயே

புகை தங்க வேண்டுமெனக் கூறவில்லை,

வெளிச் செல்கையில் என்னை நோக்கி

ஒரு புன்னகை

ஒரு கை அசைப்பு

ஒரு மகிழ்ச்சி

இவைகளையே எதிர்பார்க்கிறேன்.

அவ்வளவுதானே?!

– ஆத்மாநாம் அவர்களின் கவிதை யைத் தான் நானும் வழிமொழிகிறேன். நம் கண்களை நம் விரல்கள் கொண்டு குத்துவதா? பிரியத்தோடு பிரிவோம் !


Failed in a relationship? Are you in a situation to breakup with a love or is it time to be away from your loved ones? A bit of maturity and deep understanding in relationship will bring a smile beyond the cry in your heart. A painful separation with a smile of understanding is where a relationship begins to blossom.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.