தன்னைவிட அதிக வயது உள்ளவர்களிடம் காதல் கொள்ளலாமா?

சங்ககால இலக்கியங்களில் காதல் மனஉணர்வுகளை நன்கு வெளிப்படுத்தும் வகையில் பல பாடல்கள் பாடப்பெற்று உள்ளன. அவ்வகையான பாடல்களில் கூறப்பட்ட உணர்வுகளை ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை உள்ளம் சார்ந்தவற்றின் கீழ் வகைப்படுத்துவதால் அகத்திணைகள் என்கிறார்கள்.

அகத்திணைகள் மொத்தம் ஏழு வகைப்படும். அவை கைக்கிளை, பெருந்திணை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகும்.

காதலர்களின் உள்ளத்தே எழுகின்ற மன உணர்வுகளுக்கும், அதன் காரணமான செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஐந்து வகைகளாக பிரித்து உள்ளனர்.

1. குறிஞ்சி – புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)

2. பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

3. முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்)

4. மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும்

5. நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும் (வருந்துதல்)

இவைகள் பற்றிய அறிவு செய்யுள் செய்வோர்க்கு தேவை, நாம் இதனைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம்.

கைக்கிளை என்பது ஒருதலை காதலை குறிப்பது. அதேபோல் பெருந்திணை பொருந்தா காமத்தை குறிப்பது. உளவியல் சிக்கல்கள் நிறைந்த பெருந்திணையைப் பற்றி பார்ப்போம்.

பெருந்திணை ஏதோவொரு ஒரு சிறுதானிய உணவு அல்ல. அன்றாடவாழ்க்கையில் நாம் கடந்து போகும் பாதையில் தென்படும் காட்டுப்பூக்கள். நம் இலக்கியங்கள், திரைப்படங்களில் பட்டும் படாமல் கையாண்டு உள்ளார்கள். தனிமனித ஒழுக்கச்சீர்கேடாக பார்க்கப்படும் இதுவும் காதலின் ஏழு வகையில் ஒன்றே! அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் இல்லை.

பெருந்திணை என்பது அறம், சமூகம், ஒழுக்கம் என இலக்கணம் மீறிய காதல் என கூறுகின்றனர். தன்னைவிட வயது மீறிய எதிர் பாலினம் மீது வரும் காதல்.

பெருந்திணை காதலை இன்று திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் என சமூகம் இழிவாக அழைத்தாலும், எல்லொரும் துணிச்சலாக ஈடுபடுவதில்லை. சங்ககாலத்தில் என்ன சூழல் என்று நாமறியோம்.

ஆனால் நம் காலத்தின் போது ஏற்படும் உறவுகள் அனைத்தும் தனிமனிதனின் உளவியல் சுகக்கேடுகளுடனே தொடர்பு படுத்தி பார்க்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். அவர்கள் கூறும் காரணங்கள் கூட ஏற்புடையதாக உள்ளது. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

1. இளம்வயது திருமணங்கள் பெரும்பாலும் பொருந்தாத திருமணமாகவும், பெற்றோர்களின் நிர்பந்தத்தால் நடந்த திருமணங்கள் நாளடைவில் ஈர்ப்பு ஏதும் இல்லாமல் காதலின்றி வாழ்க்கை கடமையாகும் போது சலிப்புற்ற மனங்கள் வேறு ஒருவரை நாடிச் செல்கின்றனர்.

2. தம்பதிகள் பெற்றோர் ஆகும் போது தங்களுக்கு என நேரம் ஒதுக்காமல் இருத்தல், பொருளாதார சிக்கல்கள், குடும்ப பிரச்சினைகள், உணர்வு ரீதியான பந்தத்தில் இருந்து விலகுதல்.

3. வறுமை, சிலருக்கு வேறு நபர்கள் மீது உள்ள ஆர்வம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. எது எப்படியோ எத்தன்னை காரணங்கள் கூறினாலும் தவறு தவறு தான்.

நாம் எல்லோரும் ரசித்த திரைக்காவியம் ஒன்று பெருந்நிணைக்கு கீழ் வரும். எண்பதுகளில் பாடலாலும், வித்யாசமான கதையாலும் ரசிகர்களை கவர்ந்த முதல் மரியாதை படமே தான். குயிலுக்கும், மலைச்சாமிக்கும் இடையே இருக்கும் அந்த தோழமை அது நாளடைவில் காதலாக அதுவும் கண்ணியகுறைவு இல்லாத காதலாக ரசிகர்கள் போற்றும் காதல்.

குயிலு, மலைச்சாமியின் மாடர்ன் வெர்ஷனாக எனக்கு தோன்றுவது நம்ம ஊரு மயில் அவரேதான் நம்மைவிட்டு பிரிந்த போனி கபூர் ஜோடியைப்பார்க்கும் போது முதல் மரியாதை ராதா , சிவாஜி போன்றே தோன்றும் எனக்கு. என்னைப் போலவே உங்களுக்குமா?


Is it good to love or marry a person much elder than me? Relationship advice for men and women in Tamil.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.