செடிக்கு தொட்டி ஆதாரமா? Organic Home Gardening Tips

Re-potting என்பது தொட்டியில் செடி வளர்த்துபவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். செடிகளின் வயதுக்கேற்ற வளர்ச்சியும் உயரமும் அடையும் போது பழைய தொட்டிகள் அளவு போதாமல் செடிகள் பலவீனமடைந்து நாளடைவில் பட்டுவிடும்.

தொட்டி முழுவதும் வேர்களால் பின்னிபிணைந்து இருக்கும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதிய தொட்டிகளில் செடிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
தொட்டியில் உள்ள செடிகளின் வளர்ச்சி மெதுவாக அல்லது முற்றிலும் வளர்ச்சியற்ற நிலை.

நீர் ஊற்றும் போது நீர் உறிஞ்சிக் கொள்ள தாமதமாவது , வேர்கள் நீர் வடிதுளைகளினை வழியே வளர்ந்து செல்வது, மண் வறண்டு செடிகள் வாடி வதங்கி இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தொட்டி மாற்றுவதற்கான தருணம்.

வீட்டுத்தோட்டத்திற்க்கு தேயிலை பயன்படுத்துவது எப்படி!

மாற்றவேண்டிய தொட்டி செடியை நிழலானபகுதியில் இருவாரங்களுக்கு முன் வைத்து புதிய வெப்பநிலை, சூழ்நிலைக்கு பழக்கப்படுத்தவும் .தொட்டி மாற்றிய பின்னர் எனில் புதிய சூழ்நிலை க்கு பழக்கப்படாமல் அதிர்ச்சிக்கு உள்ளாகும் .அவைகளும் உயிர் உள்ள ஜீவன் தானே!

பழைய தொட்டியைவிட குறைந்த பட்சம் இரண்டு இஞ்ச் ஆழமும் சுற்றளவும் அதிகம் உள்ளவாறு புதிய தொட்டியை தேர்ந்தெடுக்கவும். செடியின் அளவுக்கு மீறி பெரிய தொட்டி எனில் நிறைய நீர் பிடிக்கும் அதுவே வேர் அழுகலுக்கு வழிவகுக்கும்.

புதிய தொட்டிகளை மண் தொட்டி எனில் முதல் நாளே நீரில் ஊற வைத்து பிறகு பயன்படுத்தவும் ஏனெனில் புதிய தொட்டி செடிக்கு ஊற்றிய நீரை உறிஞ்சினால் செடி நீரின்றி வாட ஆரம்பித்து விடும்.

1. முதலில் புதிய போதுமான அளவுள்ள தொட்டியையும் அதற்கு நிரப்ப மண் என அனைத்தையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.

2. Re-potting செய்ய வேண்டிய தொட்டியில் நன்கு நீர் ஊற்றி இலகுவாக்கவும்.

3. நீர் நிரம்பிய பெரிய வாளியில் தொட்டியை மூழ்கவிடவும் ,சில நிமிடங்களில் நன்றாக நீரில் மூழ்கி பிரித்தெடுக்க வசதியாக இருக்கும். சிறிய அளவிலான தொட்டிகளுக்கே இந்த முறை ஏற்றது.

4. தொட்டியை தலைகீழாக திருப்பி , நம் ஒரு கையால் செடிக்கு ஆதரவாக நன்கு பிடித்து கொள்ளவும். இன்னொரு கைகளால் மெதுவாக தொட்டியின் அடிப்பகுதியில் தட்டவும் ( விளக்கப்படத்தை காணவும்)

5. தனியே பிரிந்து வந்த செடியின் வேரினை ஆராய்ந்து அழுகிய , பழுதடைந்த வேர்களை நீக்கவும் . வேர்களை கவாத்து செய்வது போல் நெறிப்படுத்தி , இளம்வேர்கள் நிறையவும் , முதிர்ந்த வேர்கள் ஓரளவிற்கு என பழுது பார்க்கவும்.

6. மூன்றில் ஒரு பங்கு பழைய தொட்டி மண் மற்றும் புதிய மண்கலவையுடன் நடவேண்டும்.

7. குளிர் நீர் ஊற்றி, வெயில் படாமல் ஒரு வாரம் கழித்து இளம்வெயிலில் அறிமுகப்படுத்தவும். பின்பு படிப்படியாக வேர்ப்பிடித்து தழைய ஆரம்பிக்கும்.

Happy Gardening!


These are some useful tips on how to start an organic garden, from watering to weeding at home with little available space. This helps to maintain home garden without much hassles. You can also plan for a terrace gardening in growing vegetables, fruits and flowers.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.