முகம், கை, கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா?

அதிக வெயில் அதனால் வரும் uv கதிர் வீச்சினால் வெயில் படும் பகுதியில் தோல் கறுத்து விடும். தொடர் உராய்வினால் தோல் தடித்து கறுத்தல் மற்றும் ஏதேனும் மருத்துவ காரணங்களால் முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகள் கருமையாகும்.

என்ன செய்தாலும் இந்த கருமைகள் போகவேயில்லை என சலித்துக் கொள்ளாமல் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தில் கருமை படர்ந்து இருப்பதை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.

கருமையைப் போக்கும் ஓர் எளிய மாஸ்க்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதிமதுர பொடியை வாங்கி வைத்து கொள்ளவும்.

  • அதிமதுர பொடி
  • தக்காளி
  • ரோஸ் வாட்டர்
  • தேன்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி ஊறவிடவும். 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இதில் உள்ள அதிமதுரம் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகளைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டும். மேலும் இறந்த செல்களை நீக்குகிறது.

தக்காளியில் உள்ள லைக்கோபீன், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்குகிறது.

தேன் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரித்து, சருமத்திற்கு பொலிவைத் தருகிறது.

ரோஸ் வாட்டர் வறட்சியான சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். எண்ணெய் பசை சருமத்திற்கு நிறமூட்டும், சருமத்திற்கு மென்மையூட்டும்.

ஃபேஸ் மாஸ்க் – 2

தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கறுப்பு திட்டுக்கள் மீது தடவவும். எலுமிச்சை சாறு அதன் ப்ளீச்சிங் தன்மையால் கருமை நீக்குகிறது. தேன் சருமத்தை மென்மையாக்கி பொலிவு தருகிறது.


Oats is not only a good food but it also works as a medicine to treat black spots, acne marks, or pimple scars on the face. You can apply an oatmeal face mask regularly in order to get rid of the dark spots on your face. Prepare a paste using oatmeal and lemon juice. Apply this paste onto the spots and scrub it gently. The hyper pigmented scars are not permanent, but they can be slow to fade. In fact, an acne mark may persist for as long as three to six months after the pimple has disappeared. If you develop acne marks or other dark spots on your skin, be patient.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.