கஞ்சி சோறு எந்த காலத்திற்க்கும் ஏற்றது!

தென்னிந்தியர்களின் முக்கிய உணவு அரிசி. நேற்று வரை நம் மூதாதையர்களிலிருந்து நமக்கு முந்தைய தலைமுறை வரை பிரதான உணவு அரிசிச் சோறு. இன்றும் மூன்று வேளையும் அரிசி சோறு உண்டு உழைக்கும் வர்க்கத்தினர் உண்வு.எந்த உணவும் கெடுதல் இல்லை, மனிதன் பசியாறவும் உயிர்களின் சக்திக்கு மூலகாரணமாகவும் இருக்கிறது.

அப்படி என்றால் எங்கு தவறு?
அரிசி உணவால் நீரிழிவு நோயும் , உடற்பருமனும் பூதாகரமானது ஏன்? அத்தனை அடுக்கு கேள்விகளுக்கும் பதில் உண்டு.பதில்களை உணர்ந்து வழிநடப்பவர் தான் குறைவு.

உடல் உழைப்பு குறைந்த காரணத்தால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு சர்க்கரை நோய்க்கு வழி வகுத்தது.

நம் முன்னோர்கள் நீராகாரத்துடன் தான் ஒவ்வொரு காலையையும் தொடங்கினார்கள்.

ஓர் இரவு முழுவதும் நீரில் புளித்த சோறு, நல்ல பாக்டீரியாக்களால் நிரம்பி இருந்தது. உடலுக்கு குளிர்ச்சியும், நோய் எதிர்ப்புச் சக்தியையும், ஆற்றலையும் தந்தது.

“Probiotic”, என்று உணவியல் வல்லுநர்களால், வரையறுக்கப்பட்ட அட்டவணையில் நமது பழைய சோறு உண்டு. இன்னும் ஒரு படி முன்னேற்றமாக probiotic drink என்ற பெயரில் டெட்ரா பேக்கில் நீராகாரத்தை, வெளிநாட்டில் விற்கிறார்கள்.

அரிசி கஞ்சி

நமது வீடுகளில் சாதாரணமாக செய்த பழைய சோறு எப்படி செய்வது என செய்முறைகள் கொடுத்துள்ளார்கள் நம் விஞ்ஞானிகள்.அதையும் தெரிந்து கொள்வோம்.

மூன்று டேபிள் ஸ்பூன் அரிசியை மூன்று தம்ளர் நீர் சேர்த்து 30 லிருந்து 40 நிமிடங்கள் வேகவிடவும். அரிசி வெந்து நீரோடு மசிந்து வெண்ணிற மசிபோல ஆகியதும் ருசிக்க வேண்டியதுதான்.

உடலுக்கு குளிர்ச்சி
குளிர்ந்த நீரில் குளிப்பது உடலின் புற வெப்பத்தை தணிப்பது போல, சோறு கஞ்சி உடல் உள்ளுறுப்புகளின் சூட்டை தணிக்கும். மனதுக்கும் உடலுக்கும் நல்ல புத்துணர்வு மற்றும் ஓய்வு தருகிறது.

சக்தி தருகிறது
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு என்பதால், உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

நீர் இழப்பை தடுக்கிறது
கோடைக்கால வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். இந்த நீராகாரத்தில் உடலுக்கு தேவையான நீர் மற்றும் இதர சத்துக்களும் கிடைக்கிறது.

வயிற்றுப்போக்கிற்க்கு பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகளுக்கு வரை சிறந்த உணவு.

தலைக்கு அரிசிகஞ்சியை சேர்த்து குளிப்பதால், வேர்க்கால்கள் முடியை வலுவாக்கி கூந்தல் உதிர்வது குறையும்.


A plain rice porridge, or the thick supernatant water from overcooked rice, is known as kanji. Kanji soru(Rice Porridge) is said to provide energy, help with stomach issues like bloating and constipation and diarrhea, help protect from the sun. It also has skin and hair benefits. It is a probiotic food, easily digestible, gives enough energy to the body and reduces body heat. It has vitamins, carbohydrate, minerals and amino acids that are essential for beautiful hair and skin. It is suitable for all seasons. Fermented rice water can be used as a face cleanser, skin toner and to condition hair.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.