வெயிட் குறைக்க வேண்டுமா? இந்த சப்பாத்தியை சாப்பிடுங்கள்!!!

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை கட்டாயம் குறைக்க வேண்டும் என்ற சூழல் வரும் போது நிபுணர்களின் அறிவுரை என்னவென்றால் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். நமது பிற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான கோதுமை, அரிசி எப்படி சமைப்போமோ அப்படி சமைக்கலாம்.பொதுவாக கம்புக்கு என்று பிரத்யேக மணமும், நிறமும் உண்டு. வறண்டு போகாமல் மென்மையான சப்பாத்தியாக சுடுவது தான் இதிலுள்ள பெரும் சவால்.

கம்புமாவில் வெஜிடபிள்கலவை சேர்த்து சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

 • கம்பு மாவு – 1 கப்
 • பச்சை மிளகாய் – 3
 • கறிவேப்பிலை – 1 கொத்து
 • முட்டை கோஸ் – 100 கிராம்
 • கேரட் – 2
 • கரம்மசாலா தூள் – அரை ஸ்பூன்
 • எண்ணெய் – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு
 • பால் – அரை கப் (சூடாக இருந்தால் நல்லது)

செய்முறை

 • முட்டைகோஸ், கேரட்,  துருவிக் கொள்ளவும்.
 • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் உப்பு, துருவிய காய்கறிகள், கரம்மசாலா தூள், பால், ப.மிளகாய், போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊறவிடவும்.
 • பிரைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து எடுக்கவும்.
 • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வட்டமாக தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுங்கள்.
 • சப்பாத்தி சுட்டதும், சூடாக இருக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் வைத்து உண்ணலாம். 
 • தயிர் பச்சடி இருந்தாலே போதும் இந்த சப்பாத்திக்கு.

Chapatis or rotis are fresh homemade bread, made with wheat or other grain flours and baked without yeast. Chapatis offer strength and energy to the body and are good for all the three doshas. A simple Indian flat bread commonly known as chapati or rot. A 1/3-cup serving of rice contains 80 calories, 1 gram of protein, 0.1 gram of fat and 18 grams of carbohydrate. A small, 6-inch chapati contains 71 calories, 3 grams of protein, 0.4 gram of fat and 15 grams of carbohydrates, including 2 grams of fiber. A small, 6-inch chapati contains 71 calories, 3 grams of protein, 0.4 gram of fat and 15 grams of carbohydrates, including 2 grams of fiber. The chapati is lower in calories and provides more protein and fiber, both of which help keep you feeling full for longer. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.