மைக்ரோவேவ் ஓவனில் முட்டை இல்லாத கேக் செய்து பார்ப்போம்!

வித்தியாசமான சுவையில் ஒரு எளிமையான செய்முறை கேக் ரெசிபி இது. ஓவன் இல்லாவிட்டால் வழக்கம் போல குக்கரில் செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்

 • மைதா – 150 கிராம்
 • சர்க்கரை – 100 கிராம்
 • எண்ணெய் – 125 மிலி
 • மில்க் மெய்ட் – 60 மிலி
 • பால் – 120 மிலி
 • பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
 • வென்னிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
 • டுட்டி ப்ரூட்டி, உலர் விதைகள் – 50 கிராம்


கேக் செய்வதற்கு முன்பு தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். கேக் செய்ய முதலில் எப்போதும் மாவு தண்ணீர் மற்றும் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும். இயன்றவரை சரியான அளவில் அளந்து எடுக்கவும்.

எண்ணெய்க்கு பதிலாக முழுவதும் வெண்ணெய் பயன்படுத்தி கூட செய்யலாம். ஒரிஜினல் ப்ளம் கேக் செய்முறை கிறிஸ்துமஸ்க்கு இரண்டு மாதங்கள் முன்பே உலர் பழங்கள், விதைகளை ரம்மில் ஊறவைத்து விடுவார்கள். அதனால் தான் ப்ளம் கேக் லேசான புளிப்புடன் கிடைக்கிறது.

செய்முறை

 • முதலில்Tutti Fruity-ஐ எடுத்துக் கொள்ளவும். அதன் மீது மாவை தூவி அதனை தனியே வைக்கவும்.
 • பின்பு மைதாமாவை எடுத்து அதனுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுக்கவும்.
 • பின்பு எண்ணெய், சர்க்கரை மற்றும் வென்னிலா எஸன்ஸ் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
 • அதனை நன்கு கலக்கவும். பின்பு மில்க் மெய்டுட் சேர்க்கவும். பால் சேர்க்கவும். நன்கு கலக்கவும். 
 • மேற்கண்ட கலவை உடன் சலித்த மாவை சேர்க்கவும். நன்கு கலக்கவும். பின்பு பழக் கலவை (Tutti Fruity) சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
 • மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரையின் அளவை முதலில் குறைத்து கொள்ளவும். பிறகு இனிப்பு போதவில்லை என்றால் சேர்த்து கொள்ளவும்.
 • கேக் டிரேவை எண்ணைய் தடவி அதன் மீது மாவை தூவவும்.
 • மைக்ரோவேவ் ஓவனை ஃப்ரீ ஹீட் செய்யவும்.
 • கலந்த கலவையை கேக் டிரேயில் விடவும். பின்பு அதனை மைக்ரோ வேவ் அவனில் 180°அளவில் 30- 35 நிமிடம் வரை வேகவிடவும்.
 • சூடு ஆறியதும் அதனை வெட்டி பரிமாறவும்.  

Using all butter will actually likely make your cake more dense and dry. You can, however, substitute vegetable oil for the canola oil without issue. Remember that the texture and taste of your baked treat will be different; butter gives lots of flavor while oil is neutral in taste, and oil will make cakes and brownies more moist compared to butter.  For example, if the recipe calls for 1 cup of butter, substitute it with ¾ cup of oil. This made from scratch Basic Vanilla Cake recipe is one that must be added to your repertoire. It’s light, tender, and full of vanilla flavor. The buttery, moist texture makes it a great cake for all occasions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.