கொளுத்தும் வெயிலில் குளுகுளு பகாளாபாத்!

கொளுத்தும் வெயிலை வரவேற்க தயாராகுவோம். சுரைக்காய் நீர்க்காய் என்பது நாம் அறிந்ததே. அதனுடன் தயிரும் சேரும் போது குளிர்ச்சி தரும். வழக்கமான தயிர் சாதமே அனைவரும் விரும்பி உண்போம். இதில் சுரைக்காய் வேறு. இந்த குளுகுளு ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

 • சுரைக்காய் துருவியது  – 1 கப்
 • புளிக்காத  கட்டித்தயிர்   – 1 1/2 கப்
 • பச்சை திராட்சை  –  1/2 கப்
 • மாதுளை முத்துகள் – 1/2 கப்

தாளிக்க

 • கடுகு – 1 தேக்கரண்டி
 • பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
 • இஞ்சி – 1 துண்டு
 • பச்சைமிளகாய் – 2
 • கறிவேப்பிலை – 1 கொத்து
 • உப்பு
 • எண்ணெய்  – தேவையான அளவு
 • குழைந்த சாதம் – தேவையெனில்

செய்முறை

 • துருவிய சுரைக்காயை அடுப்பில் வாணலியில் தண்ணீர்  சிறிது தெளித்து வேகவைக்கவும். ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும். ப்ரௌன் நிறம் ஆகாமல் வேக வைத்து எடுக்கவும்.
 • ஒரு பாத்திரத்தில் தயிருடன் வேகவைத்த சுரைக்காய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து ரெடியாக உள்ள பகாளாபாத்தில் கலக்கவேண்டும்.
 • பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் கலந்து கொள்ளவும்.
 • அரிசி சாதம் வேண்டாம் டயட் என்று எண்ணுபவர்கள் இதனை தயிர் சாதத்துக்கு பதில் சாப்பிடலாம்.
 • இதனுடன் நன்கு குழைந்த சாதத்தை கலந்து கொள்ளவும். உப்பு தேவையெனில் சேர்த்து கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதனை தயிர் கலவையில் கொட்டவும்.
 • ஊறுகாய், தொக்கு, சின்ன வெங்காயம் எதனுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.

This recipe is an enhanced version of the basic Milk Pongal that is a common South Indian Recipe that is made with rice. So it is the second easiest recipes to make in the Indian vegetarian cooking repertoire. Made by boiling rice in milk it yields a thick hardy rice dish that is traditionally served during the Tamil festival called Pongal. At the last step, yogurt is mixed into the rice to give it a bit of a tangy flavor. Sometimes it is called Curd Rice. It is made with the newly harvested rice in a special pot that was purchased just for the festival.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.