பொங்கல் ஸ்பெஷல் பச்சை மொச்சை – கத்தரிக்காய் காரக் குழம்பு

பொங்கல் பண்டிகை அறுவை திருநாள் என்பதால் பொங்கலின் போது கிடைக்கும் பச்சை மொச்சை கொண்டு சமைக்கும் சுவையான குழம்பு. சில வீடுகளில் பொங்கல் அன்று கூட சமைப்பார்கள். வெண்பொங்கலுடன் உண்பதற்கு தகுந்த குழம்பு.

தேவையான பொருள்கள்

 • மொச்சை – 100 கிராம்
 • புளி – 1 எலுமிச்சை அளவு
 • பெரிய வெங்காயம் – 1 
 • சின்ன வெங்காயம் – 1/2 கப்  
 • கத்தரிக்காய் – 1 
 • தக்காளி – 1
 • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
 • மல்லித்தூள் – 1டேபிள் ஸ்பூன்
 • பூண்டு – 4 பல் 
 • பச்சை மிளகாய் – 2
 • உப்பு – தேவையான அளவு 

மசாலா அரைக்க

 • சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
 • கசகச – 3 டேபிள் ஸ்பூன்
 • பட்டை – 1 துண்டு
 • தேங்காய் – 1/2 கப் 
 • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அனைத்து சாமான்களையும் வறுத்து கொள்ளவும்.
 • தேங்காயை தனியாக எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்.
 • சூடு ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

தாளிக்க 

 • கடுகு – 1 ஸ்பூன்
 • வெந்தயம் – 1/2 டேபிள் ஸ்பூன்
 • மிளகாய் வற்றல் – 3
 • கறிவேப்பிலை 
 • பெருங்காயத்தூள் – சிறிது

செய்முறை

 • வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து கொள்ளவும்.
 • இதனுடன் தோல் உரித்த சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
 • சிறிது வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
 • இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து சுருள வதக்கவும்.
 • இதனுடன் புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 
 • சில நிமிடங்கள் கொதித்ததும் வேக வைத்த மொச்சை சேர்க்கவும். 
 • நன்றாக கொதித்து வரும் போது அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்றாக கலந்து மசாலா வேகும் வரை கொதிக்க விடவும்.
 • குழம்பு கொதித்து எண்ணை விட்டு மேலே வரும் போது இறக்கி  கொத்தமல்லி தூவவும்.
 • சூடான சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு

 • பச்சை மொச்சை என்றால் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
 • காய்ந்த மொச்சை என்றால் 6 மணி நேரம் ஊற வைத்து  சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

Pongal kuzhambu is a celebration of fresh produce we harvest after the monsoon. It is our way of thanking the Sun, Rain and Mother Earth by using the vegetables from all types of plants like shrubs, creepers, climbers and trees. This kuzhambu is not supposed to be creamy like a dal or thick like a sambar as we do not use tur or moong dal in this. This pongal kuzhambu tastes better from the next day onwards than on the day it is made and is usually served with pal pongal for breakfast on the next day of pongal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.