OPOS-ல் சமைப்பது எப்படி தெரியுமா?

அடுப்பில்லா சமையல் , ஓவனில் சமையல் என்று விதவிதமாக சமையல் டெக்னிக்குள் வந்து பரவலாக பெண்களால் செயல்படுத்தியும் பார்க்க படுகிறது.

கொதிக்கும் இந்த கோடைக்காலம் என்பது சமைப்பவர்களுக்கு, எரியும் நெருப்பில் வெந்து கொண்டு இருப்பது போன்ற கொடுமை.

அதிலும் நகரநெருக்கடியில் காற்றோட்டம் இல்லாத சமையல் அறையில் சமைப்பது கொடுமை தான். இதற்கெல்லாம் விடிவுக்காலம் வந்தது போல தான் OPOS – One Pot One Shot Technique . இந்த டெக்னிக்கிற்க்கு சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த திரு.ராமகிருஷ்ணன்.

ஏதோ அதிரடியான சமையல் முறைகளும், புதுவித பாத்திரங்களும் தேவையில்லை. மிக எளிதாக, விரைவாக சமைக்கும் முறை என்கிறார்கள்.

அரிசியை பிரதான விருப்ப உணவாக கொண்ட தென்னிந்தியர்களுக்கு வரப்பிரசாதம் எதுவென்றால் பிரஷர் குக்கர் தான். இந்த முறையில் பிரஷர் குக்கர் தான் முக்கிய சமையற்கலன். அதனைக்கொண்டு நம் அன்றாட சமையல்களை வழக்கத்திற்கு மாறாக விரைவில் சமைக்கும் முறை தான் OPOS.

ஒரு உப்புமா செய்ய வேண்டும் என்றால் கூட எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி தாளித்து ரவைக்கு ஏற்ற தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு வறுத்த ரவையை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறினால் உப்புமா தயார். இது உலகெங்கும் உள்ள உப்புமா செய்முறை.

இதனையே OPOS-ல் செய்யும் போது ஒரே நேரத்தில் குக்கரில் வேக வைத்து எடுக்கவும். (இந்த முறையில் ரெசிபிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது) நேரமும், அதற்கு எத்தனை விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற கணக்கீடு மட்டுமே புதுமை.

நமக்கு இது புதிதன்று, பொங்கல், சாம்பார் சாதம் , பிரியாணி எல்லாம் கிட்டத்தட்ட இதே செயல்முறைகள் தான்.

வேலைக்கு போகும் பெண்களுக்கு இந்த முறை எளிதாக இருக்கும் போல. சமையல் அறையில் செலவழிக்கும் நேரத்தை குறைக்கும். வழக்கமான வறுத்த, பொரித்த என்ற சமையல் முறைகளில் காய்கறிகளின் சத்துக்கள் குறையலாம். இதில் ஆவியில் உணவுப்பதார்த்தம் தயார் ஆவதால் சத்துக்கள் வீணாகாது.

எந்தவொரு புது விஷயமும் ஏற்றுக்கொள்ள நாளாகும். இதன் நன்மை தீமைகள் இந்த முறையில் சமைத்துப் பார்க்கும் போது தான் புரிபடும்.


OPOS seems to be the simplest cooking technique trending all over recently. It uses only One pot and all cooking is done at One Shot. No steps, sequences or supervision is required for this cooking technique. OPOS cooking recipes are very healthy as it takes very less oil and more nutrients retained. It saves your cooking time, vessel washing time as it takes only one pot for cooking. It also has many more advantages.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.