பெஷாவரி ஆலு பனீர் பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம்!

வட இந்திய உணவுகளில் சிறப்பான பராத்தாக்கள் அதுவும் கோதுமை மாவில் செய்வது ருசியும் ஆரோக்கியமான உணவு. நமது குழந்தைகளும் பனீரில் செய்த உணவுகளை மிகவும் விரும்புகிறார்கள். ஆகவே இதனை குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் செய்து கொடுக்கலாம். பனீரில் புரதமும், கால்சியமும் நிரம்பி உள்ளது. உருளைக்கிழங்கு குழந்தைகள் விரும்பும் உணவுப்பொருள். இத்தன்னையும் அடங்கிய பெஷாவர் பரோத்தாவை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து விட ஏற்ற உணவு.

தேவையான பொருட்கள்

 • சீரகம் -1 டீஸ்பூன்
 • உப்பு
 • மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
 • சாட் மசாலா -1 டீஸ்பூன்
 • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
 • உலர்ந்த மாங்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
 • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
 • பச்சை மிளகாய் – 2
 • பனீர் – 200கிராம்
 • கோதுமை மாவு – கால் கிலோ
 • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
 • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

 • குக்கரில் உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு வேகவிடவும்.
 • கிழங்கு சூடு ஆறியதும் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
 • பனீரைத் துருவிக் கொள்ளவும்.
 • மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம், உப்பு, மிளகாய் தூள், மாங்காய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் பனீரை கலந்து கொள்ளவும்.
 • வாசனை பிடித்தவர்கள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை போடவும்.
 • வழக்கம் போல கோதுமை மாவை உப்பு, நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 • வழக்கம் போல சப்பாத்தி தேய்த்து அதனுள் கிழங்கு கலவையை வைத்து தேய்க்கவும்.
 • நெய் விட்டு  பராத்தாவாக சுடவும்.

குறிப்பு

உலர்ந்த மாங்காய் தூளுக்கு பதிலாக எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்த்து கொள்ளலாம்.


One Paneer paratha gives 234 calories. Out of which carbohydrates comprise 89 calories, proteins account for 28 calories and remaining calories come from fat which is 121 calories. One Paneer Paratha provides about 12 percent of the total daily calorie requirement of a standard adult diet of 2,000 calories. The major nutrients that a paratha is rich in are – Carbohydrates and fats (more so if you add ghee). The nutrients which are good for weight loss that a paratha has are – Protein and fiber. Paneer should be part of your daily diet especially if you are a vegetarian as it fulfills protein need of the body.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.