திருவாதிரை களிக்கு காம்பினேஷன் ஆன ஏழுகறி கூட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்!

திருவாதிரை நக்ஷத்திரத்தின் போது, சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய புனித நாள். அதனை சிவ பக்தர்கள் விசேஷமாக கொண்டாடுவது வழக்கம்.

ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து, நடராஜனுக்கு நிவேதனம் செய்து பின்னர் அதனை சாப்பிடுவது வழக்கம். பல்வேறு விதமாக திருவாதிரை களி செய்வார்கள். அதற்கு தோதான ஏழுகறி கூட்டு மிகவும் ருசியாக இருக்கும்.

திருவாதிரை கூட்டு அல்லது ஏழு கறி கூட்டு

தேவையான பொருட்கள்

 • பூசணிக்காய், பரங்கிக்காய், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, சௌசௌ, உருளைக்கிழங்கு (சேர்த்து) – 2 கப்
 • துவரம்பருப்பு – 1 கப்
 • புளி – எலுமிச்சை அளவு
 • கொண்டைக் கடலை – 1/2 கப்
 • தனியா – 1 டேபிள்ஸ்பூன் 
 • கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
 • தேங்காய் துருவல் – 1/2 கப்
 • காய்ந்த மிளகாய் – 6
 • கடுகு – 1 டீஸ்பூன்
 • பெருங்காயத்தூள்
 • மஞ்சள் தூள் – சிறிதளவு
 • கறிவேப்பிலை
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

 • துவரம்பருப்பு மற்றும் கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
 • நறுக்கிய காய்களை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். 
 • தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
 • வாணலியில் புளிக்கரைசலை விட்டு, அரைத்த விழுது துவரம்பருப்பு, கொண்டைக்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, உப்பு சேர்த்து, காய்களை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
 • எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.
 • சுவையான ஏழுகறிக்கூட்டு தயார். சூடான சாதத்தில் போட்டு கூட சாப்பிடலாம்.

Thiruvathirai Kootu is a medley of 7 veggies cooked in a sesame coconut paste, prepared mainly for a Hindu auspicious day Thiruvathirai festival. 7 vegetables curry / ezhukari kootu / thiruvathirai thalagam is an excellent side dish. It is a tasty side dish for Thiruvathirai Kali | Sweet Broken Rice pongal, rice, etc,. It is a nutritious side dish recipe as it contains lot of vegetables. Any type of vegetables can be added to this recipe (vegetables such as raw banana (plantain), broad beans, yam, etc,.). It is auspicious to prepare this recipe with Thiruvathirai Kali on the ocassion of Thiruvathirai festival. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.