மல்டிக்கலர் பாயாசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்!

பாயாசம் என்றாலே விரும்பி உண்பவர்கள் தான் அதிகம். அந்த காலம் போல விருந்து சாப்பாடு, பாயாசம் என்பது எப்பவாவது தான் சாப்பிட கிடைக்கும் ஆனால் மிதமிஞ்சிய உணவு வகைகள், என்ன உணவு சாப்பிட ஆசைப்பட்டாலும் உடனடியாக கிடைக்கும். ஒரு வேளை உணவுக்கு தவிப்பவர்கள் ஒரு பக்கம், புதுப்புது சுவையில் உண்ணத் தேடலுடன் இருப்பவர்கள் ஒரு பக்கம் என்ற முரணான சமூகம் தான் நமது சமூகம். பொதுசிந்தனை விடுத்து சுவையை தேடிப்போவோம்.

தேவையான பொருட்கள்

 • ஜவ்வரிசி – ஒரு கைப்பிடி
 • வெர்மிசெலி – ஒரு கைப்பிடி
 • கேரட் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
 • நறுக்கிய நேந்திரம் வாழை – ஒரு கைப்பிடி
 • தேங்காய் துருவல் – ஒரு ஸ்பூன்
 • உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், சாரப்பருப்பு –  ஒரு டேபிள் ஸ்பூன்
 • சர்க்கரை – முக்கால் கப் (ருசிக்குஏற்ப)
 • மில்க் மெய்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
 • காய்ச்சிய பால் – 1 கப்
 • நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
 • ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
 • தண்ணீர் – 1 1/2 கப்

செய்முறை

 • பாதாமை சீவிக் கொள்ளவும்.
 • கடாயில் சிறிது நெய் ஊற்றி அதில் கேரட் துருவலை போட்டு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
 • வட்டமாக நறுக்கிய நேந்திரம் வாழை பழத் துண்டுகளை நெய்யில் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
 • அடுத்து உலர்ந்த திராட்சை, சீவிய பாதாம், முந்திரி, சாரப்பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுத்துக்கொள்ளவேண்டும்.
 • ஒரு பாத்திரித்தில் ஜவ்வரிசி  மற்றும் சேமியாவை போட்டு அதனுடம் தண்ணீர், காய்ச்சிய பால் சேர்த்து வேக விடவும்.
 • மற்றொரு பாத்திரத்தில் நெய்யில் வதக்கிய கேரட் துருவலை போட்டு சிறிது பால் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
 • வெந்த வெர்மிசெலி சேமியா, ஜவ்வரிசியில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரைந்ததும் சுண்டக்காய்ச்சிய பால் விட்டு, அதில் கேரட் துருவல், வறுத்த வாழைப்பழம் தேங்காய் துருவல், வறுத்த திராட்சை, பாதாம் முந்திரி மற்றும் சாரப்பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.
 • மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரையின் அளவு தேவையெனில் குறைத்துக் கொள்ளலாம்.
 • ரொம்ப தளர்வாக இல்லாமல், சிறிது கட்டியாகத் தான் இந்த பாயாசம் இருக்கும்.

Talking of Indian desserts, one of the first things that come to mind is the image of a bowl full of rice or vermicelli cooked in milk, sweetened and finished with a hearty addition of nuts and dry fruits – Kheer or Payasamas popularly known. While the north pride about their age-old recipes for  kheersouthern India too prepares payasam for almost all auspicious occasions. There is a wide variety of payasams: from the traditional recipes that include rice, vermicelli and moong dal to other preparations like jevvarisi payasam, thengai payasam, rava payasametc. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.