கலக்கல் கட்டன் சாய் குடிக்கலாமா? (Special Kattan Chai Recipe)

இந்தியர்களை போல டீ பிரியர்கள் உலகில் வேறு எங்கும் இருப்பார்களோ என்னவோ? தெரியவில்லை. தெருவுக்கு தெரு ஒரு டீக்கடை உண்டு. நல்ல டீக்காக இரண்டு தெரு நடந்து போய் டீ குடிப்பவர்கள் உண்டு. டீயோடு அரசியல் பேசி வம்பளப்பவர்கள் தனி ரகம்.

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு பாலையும், டீயையும் ஒன்றாக கலந்து குடிப்பது தான். பாலின் பயன்களும் நமக்கு கிடைப்பதில்லை , டீயின் பயன்களும் நமக்கு கிடைப்பதில்லை.

டீயின் வகைகள் (Types of Tea)

டீ தயாரிக்க உதவும் தேயிலையின் அடிப்படையில் என்றால் க்ரீன் டீ (Green Tea), ஒயிட் டீ (White Tea), மாசா டீ (Matcha Tea)என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

டீ தயாரிக்கும் தயாரிப்பு முறைகள் அடிப்படையில் மசாலா டீ (Masala Tea), இரானி டீ (Irani Tea), பட்டர் டீ (Butter Tea), கட்டன் சாய் (Kattan Chai), சுலைமணி (Sulaimani) என்று அது ஒரு தனிப்பட்டியல்.

டீ வசப்பட்ட பொழுதுகள்

நமக்கு பரிச்சயமான நம்மட சேட்டன்மார் போடும் கட்டன் சாய் பற்றி பார்ப்போம்.

நல்ல ஒண்ணாந்தர ரெட் ஒயின் மாதிரி ஒரு கலரில் கட்டன் சாய் , நல்ல மழை கொட்டும் போது சூடா இரண்டு வடை ….டிவைன் !

அதிகம் கசப்பு இல்லாத , அளவான இனிப்பு , இரண்டு டீ ரஸ்க் மூணார் போன்ற மலைவாசஸ்தலம் , மனசுக்கு பிடிச்சவங்க அருகில்….கட்டன் சாய் கூட காதல் வளர்க்கும் !

எத்தனை ரசித்து டீ குடித்தாலும் சரி , எங்கெல்லாம் போய் டீ குடித்தாலும் சரி , ஒரு நல்ல கட்டன் சாய் போடத்தெரியாவிடில் என்ன சமையல் செய்ய தெரிந்தாலும் வீணே!

ஆகவே எளிய ஆனால் கவனமாக ஒரு கட்டன் சாய் தயாரிப்பது என்று கற்றுக் கொள்வோம்.

கட்டன் சாய் – Black ea

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் -2 கப்
  • தேயிலை தூள் – 2 டீஸ்பூன்
  • சர்க்கரை – ருசிக்கேற்ப
  • ஏலக்காய், இஞ்சி, புதினா – விருப்பம் போல

செய்முறை

  • இரண்டு கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
  • இரண்டு டீஸ்பூன் தேயிலையை தண்ணீரில் போட்டு, உடனே ஒரு தட்டு போட்டு மூடவும்.அடுப்பை அணைக்கவும்.
  • ப்ரௌன் நிறம் உடன் சிவப்பு நிறம் போல, ஒரு திரவம் தயார்.
  • “கட்டன் சாய் ருசிக்கு காரணம் டீ அதிகம் கொதித்து, கடுத்து விடாமல் இருக்க வேண்டும் அதாவது தேயிலையில் இருந்து டானின் (tannin) மெதுவாக ரிலிஸ் ஆகவேண்டும்.
  • டீ பேக் உபயோகித்தால் கூட டானின் அதிக அளவில் தண்ணீரில் கலந்து விடும். டீ யின் ருசி மாறிவிடும்.
  • சுருண்டு, உலர்ந்த தேயிலை எனில் மெல்ல சுடுநீரில் ஊறி, விரிந்து சுவை கொடுக்கும்.
  • விருப்பம் போல ஏலக்காய், இஞ்சி, புதினா என்று அவரவர் விருப்பம் போல சேர்த்து கொள்ளவும்.

This black tea is called as ‘Kattan Chai’ in our local language in our country. This is a wonderful ‘after meal drink’ for good digestion. Served in tiny glasses, it tastes slightly bittery but the spices added in it gives special aroma and taste to it. Making this black tea with the dried tea leaves makes it so rich and healthful. Several studies says that there are some interesting health benefits of drinking tea specifically black tea with added spices.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.