தினை – தேங்காய்ப்பால் புலாவ் எப்படி செய்வது என்று பார்ப்போம்!

இன்றைய சூழலில் நமது சமையலில் சிறுதானியங்கள் தவிர்க்கமுடியாத உணவுப் பொருளாக மாறி வருவது என்ஞ வரவேற்கத்தக்க விஷயம் சிறுதானியம் என்றாலே களி, கஞ்சி, கூல் இதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் சிறுதானியத்தில் அரிசியில் செய்யும் அத்துணை வகை உணவுகளை தயார் செய்யலாம். சிறிது அக்கறையும் மெனக்கிடலும் இருந்தால் போதும் விதவிதமாக சமைக்கலாம். சிறுதானியங்களில் தோல் நீக்கிய திணை அரிசியை தான் பயன்படுத்துகின்றனர்.

தேவையான பொருட்கள்

 • தினை அரிசி – ஒரு கப்
 • தேங்காய் – அரை மூடி  
 • வெங்காயம் – 1 
 • தண்ணீர் – 1 கப்
 • பச்சைப் பட்டாணி – அரை கப்
 • இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
 • பச்சை மிளகாய் – 4  
 • எண்ணெய் – 4 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு

தாளிக்க

 • பட்டை – 2
 • சோம்பு – 1/4 டீஸ்பூன்
 • பிரியாணி இலை – 1
 • ஏலக்காய் – 1

செய்முறை

 • தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
 • தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
 • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
 • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். 
 • அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
 • பிறகு இஞ்சி – பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிக்க விடவும்.
 • பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.
 • வழக்கமான அரிசி புலாவிற்க்கு போல முட்டை குழம்பு, தக்காளி பச்சடி, கத்தரிக்காய் குழம்பு, சால்னா உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Foxtail Millet Coconut Milk Pulao is an easy to make recipe is a powerhouse of minerals and fibre.  They can easily be substituted for rice by making slight variation in the style of cooking. Just like any other millet, foxtail millet contains much more nutrition than any other grain. They are a source of complex carbs, which in simple terms mean, they are high in fibre and are ideal for health. Higher protein and fibre content indicate a higher satiety power, which means that one wouldn’t feel hungry too soon and will tend to eat only till they are full.  Combined with coconut milk, this  Foxtail Millet Coconut Milk pulao makes a wholesome, nutritious and tasty one-pot meal. They make an excellent meal for diabetics and weight watchers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.