10 நிமிடத்தில் பன்னீர் கோலா உருண்டை செய்யலாம்!

வாழைப்பூ, சிக்கன், மட்டன் கோலா உருண்டை செய்தும் ருசித்தும் உள்ளோம். சதைப்பற்றான மீன் கொண்டு செய்யும் கோலா உருண்டை உண்டு. அந்த வரிசையில் பனீரை கொண்டு கோலா உருண்டை . பனீர் என்றாலே குழந்தைகள் விரும்பி உண்பார்கள். குழந்தைகளுக்கான மாலை நேர டிபனுக்கு ஏற்ற ரெசிபி இது.

தேவையான பொருட்கள்

 • பன்னீர் – 100 கிராம்
 • பிரட்தூள் – 1/2கப்
 • உருளைக்கிழங்கு – 1 சிறியது
 • பெரிய வெங்காயம்  – 1 சிறியது
 • புதினா   – சிறிதளவு
 • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 • பச்சை மிளகாய் – 1
 • மிளகாய் தூள்  – 1 டீஸ்பூன்
 • சாட் மசாலா  – 1/4 டீஸ்பூன்
 • எலுமிச்சை  –  அரை மூடி
 • சோள  மாவு  – 1 டேபிள் ஸ்பூன்
 • உப்பு – தேவைக்கேற்ப
 • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

 • பன்னீரை துருவிக்கொள்ளவும்.
 • வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். குழந்தைகள் உண்பதால் பச்சை மிளகாயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு நறுக்கலாம்.
 • உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் துருவிய பன்னீர், கொத்துமல்லி, புதினா, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகாய் தூள், சாட் மசாலா, பிரட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
 • இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
 • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
 • மிதமான தீயில் அடுப்பை எரிய விட்டு, சுற்றிலும் பொன்னிறமாக வரும் வரை நன்கு பொரித்து எடுக்கவும்.
 • சுவையான பன்னீர் கோலா உருண்டை தயார்.

Paneer is very popular dishes in parties, marriage ceremonies, and other functions. There are several varieties in paneer such as shahi paneer, chilli paneer, paneer do pyaza and many more. Paneer is a milk product and an important diet for human.  If you are a fitness freak than paneer is best source of protein you can have after work out. The Mutton Kola Urundai can be served as an appetizer or as a side to a main meal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.