குழந்தைகளுக்கான இணை உணவாக கேரட் மால்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம்!

ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் மெல்ல மெல்ல நாம் உண்ணும் உணவுகளை உண்ணக்கொடுத்து பழக்குவதே சிறந்த குழந்தை பராமரிப்பு. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வெறும் தாய்ப்பால் மட்டுமே ஈடு கொடுக்க இயலாது. மசித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள், கேரட் என கொடுக்கலாம். எப்போதும் ஒரே சுவையில் தராமல் வேறுவிதமாக சமைத்து தரும் போது குழந்தைகள் சப்புக் கொட்டி உண்ணும். அந்த வகையில் கேரட் மால்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • கேரட் -1
 • சர்க்கரை – ருசிக்கேற்ப
 • ஏலக்காய் தூள் -1 டீஸ்பூன்
 • நெய் – சில சொட்டுகள்

செய்முறை

 • நன்கு வளர்ந்த ஒரு கேரட் அல்லது சிறிய அளவு என்றால் இரண்டு காரட் எடுத்து சுத்தமாக நன்கு கழுவவும்.
 • காரட்டை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
 • நறுக்கிய துண்டுகளை ஆவியில் வேக விடவும் அல்லது குக்கரில் அளவான தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
 • நறுக்கிய துண்டுகளை சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
 • அடுப்பில் கனமான பாத்திரத்தில் சில சொட்டுகள் நெய் விடவும்.
 • நெய் காய்ந்ததும் அதில் கேரட் கலவையை கொட்டி கிளறவும்.
 • மேற்கண்ட கேரட் கலவையுடன் பொடித்த வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கிளறவும்.
 • ஏலக்காய் தூள் சேர்த்து அடிப்பிடிக்காமல் நீர் வற்றி வரும் வரை கிளறவும்.
 • காய்ச்சிய பால் தேவையான அளவு சேர்த்து கிளறி இறக்கவும்.
 • வெல்லம் /கருப்பட்டி சேர்த்தால் பால் சேர்த்தவேண்டாம். பால் இல்லாமல் கூட ருசியாக இருக்கும்.
 • விட்டமின் ஏ நிறைந்து காணப்படும் என்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

Carrots contain vitamin A, antioxidants, and other nutrients. Evidence suggests that eating more antioxidant-rich fruits and vegetables, such as carrots, can help reduce the risks of cancer and cardiovascular disease. Carrots are also rich in vitamins, minerals, and fiber.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.