ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்டில் வெஸ் ரோல்!!!

எல்லா சீசனிலும் கிடைக்கும் காய் எதுவென்றால், முட்டை கோஸ் தான். கிராமத்து கல்யாண விருந்தில் இருந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் விருந்து வெஜ் ரோல் வரைக்கும் இருக்கும். ஆக இருப்பவர், இல்லாதவர் எல்லோர் வீட்டு சமையலிலும் இடம்பெறும். முட்டை கோஸ் வைத்து ஒரு வெஜ் ரோல் செய்து பார்ப்போம்.

முட்டை கோஸ் வெஜ் ரோல்

நன்கு விளைந்த கெட்டி முட்டை கோஸில் இருந்து இதழ்களை பிரித்து எடுக்கவும்.

தேவையான பொருட்கள்

 • முட்டை கோஸ் இலை – 10
 • மசித்த உருளைக்கிழங்கு – 2
 • துருவிய கோஸ், காலிஃபிளவர், கேரட், பீன்ஸ் –  50 கி 
 • சீஸ் அல்லது பன்னீர் துருவல் – 1 கப்
 • சீரகப் பொடி – 1 டீஸ்பூன் 
 • மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

 • முட்டை கோஸ் இலைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
 • வேகவைத்த உருளைக்கிழங்குகளை மசித்து கொள்ளவும்.
 • சீஸ் அல்லது பன்னீரை துருவிக் கொள்ளவும்.
 • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
 • பிறகு மசித்த உருளைக்கிழங்கு, துருவிய காய்கறிகள், சீஸ் இவற்றை சீரகப்பொடி, மிளகாய்த்தூள் தூவி உப்பு சேர்த்து,  நன்கு வதக்கிக் கொள்ளவும்.
 • பிறகு அதிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து கோஸ் இலையில் நடுவில் வைத்து சுருட்டி டூத் பிக் வைத்து குத்திக் கொள்ளவும். 
 • பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, இவற்றை நன்கு வறுத்து எடுக்கவும்.
 • பேக்கிங் – baking வசதி உள்ளவர்கள் ஓவனில் பேக் செய்து கொள்ளவும்.
 • சுவையான கேப்பேஜ் வெஜ் ரோல் தயார். சாஸ் அல்லது கெட்சப் தொட்டுக் கொண்டு உண்ணலாம். 

குறிப்பு

இதற்கு மாற்றாக சேம்பு இலை, வெற்றிலை வைத்தும் செய்யலாம். அசைவ பிரியர்கள் சிக்கன் அல்லது மட்டன் வைத்து ஸ்டப்பிங் செய்து கொள்ளலாம். 


Calories in spring rolls can vary, depending on the size and ingredients, but generally range from 80 to 110 calories. By comparison, one vegetable-filled egg roll contains about 153 calories. Ordering fresh spring rolls in place of egg rolls can cut out half the amount of calories and fat from your appetizer or side item. Not only are spring rolls better by comparison, but they’re actually a healthy choice and a low-calorie way to fill up on all the nutrients and benefits of raw vegetables.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.