தேங்காய் பாலில் இருந்து அமிர்த வெண்ணெய் எடுக்க தெரியுமா?

மாட்டு பாலில் வெண்ணெய் என்பது நாம் அறிந்ததே. வேகன் உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் நிலக்கடலையில் இருந்து பெறப்படும் வெண்ணெய் (pea butter, Coco butter ) கோகோ பட்டர் என சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. தேங்காய் பாலில் இருந்து வெண்ணெய் எப்படி எடுப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • பெரிய தேங்காய் – 1
 • தேங்காயை துருவி சிறிது சுடு தண்ணீர் (ஒன்றரை கப்) சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். சுடுதண்ணீர் சேர்த்தும் போது பால் எளிதாக கிடைக்கும்.
 • தேங்காய் பாலை குளிர்சாதன பெட்டியில் குறைந்த பட்சம் 5 மணி நேரம் வைக்கவும்.
 • தேங்காய் பாலில் உள்ள திக்கான க்ரீம் மேலே உறைந்து நிற்கும். தண்ணீர் கீழே பிரிந்து நிற்கும்.
 • க்ரீமை மட்டும் எடுத்து அடி கனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் காய்ச்சவும்.
 • சுமார் ஒரு 20 நிமிடம் காய்ச்ச எண்ணை தனியாக, கசடு தனியாக பிரிந்து வரும்.
 • வெண்ணெய் காய்ச்சும் போது கசடு பொன்னிறமானதும் இறக்கி ஆற வைப்பது போல தான்.

பயன்கள்

 • முடி உதிர்வு, தோல் வியாதிகள், காயங்களுக்கு தேய்க்கலாம் .
 • தைராய்டு உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் சிறிதளவு இதனை குடித்து வரலாம்.
 • பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் மார்பக காம்பு புண்களுக்கு போடலாம் 
 • ஒரு பெரிய தேங்காய்க்கு 75 ml எண்ணை கிடைக்கும்.
 • தேங்காய் இளசாகவும் இருக்க கூடாது ரொம்ப முற்றினதாகவும் இருக்க கூடாது.
 • விளைந்த , எண்ணெய் சத்து நிறைந்த தேங்காயை தேர்வு செய்ய வேண்டும்.
 • தேவையெனில் காய்ச்சும் போது சிறிது கறிவேப்பிலை சேர்க்கலாம்.

Coconut ghee is naturally good for health. If you are a coffee lover, you can make coconut ghee coffee with good aroma. Coconut oil and ghee combination goes well for hair growth also.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.